17 March 2008

வீரத்தின் வித்துக்கள்



சத்தம் செய்யாதீர் -இங்கு


எங்கள் குழந்தைகள் துயில்கின்றனர்


தாயின் கருவறையில் இருந்து பிறந்த


இவர்கள் தாய் மண்ணின் கருவறையில்


துயில்கின்றனர்


சத்தம் செய்யாதீர்கள் -இங்கு


எங்கள் குழந்தைகள் துயில்கின்றனர்



சாவுக்கே சாகசம் காட்டிய வித்தகர்-இவர்கள்


சாவைகண்டும் அஞ்சதா வீரமறவர்கள்


தாய் நாட்டிற்காக தம்மையே தந்த


சத்திய புருசர்கள் இவர்கள்


சத்தம் செய்யாதீர்கள் -இங்கு


எங்கள் குழந்தைகள் துயில்கின்றனர்



கரிகாலனின் களச்சேனைகள்-இவர்கள்


அண்ணன் சொல்லையே வேதமாக


தமிழ்த் தாயகமே தம் லட்சியமாக கொண்ட


வரிப்புலிகள்-இவர்கள் சாவடைய வில்லை


இங்கு வாழ்கின்றார்கள் ..


இம்மண்ணில் துயில்கின்றார்கள்


எங்கள் குழந்தைகள்


சத்தம் செய்யாதீர்கள் !!

+

-:ஓவியன்:-

மாவீரச் செல்வங்களே ....


மாவீரச் செல்வங்களே !

சாகா வரம் பெற்ற சத்தியவான்களே

உங்கள் மக்களின் தாலாட்டிலும்

தாய்மண்ணின் இதமான அணைப்பிலும்

நிம்மதியாக துயிலுங்கள்

உங்கள் வழி நாம் தொடர்வோம்

உங்கள் கனவினை நினைவாக்கி

உம்மிடமே நாம் வருவோம்

+
-:ஓவியன்:-

08 March 2008

வேங்கையின் மைந்தர்கள்


வேங்கையின் மைந்தர்கள் நாமடா!
களவேட்டையாடிடும் வீரரேடா!
சிங்கம் எங்களின் பகையடா !-அதனை
சிறுத்தைகள் நாம் எதிர்போமடா !



தமிழ் அழிக்கும் பகைவனின்
கதை முடிக்கவே
தலைவனின் வழி நடப்போமடா !
செங்கடல் எங்கும் போர் முரசறைவித்தே
எம் தமிழீழத்தை காப்போமடா !



மண்ணுக்குள் வித்தானா மாவீரர்
எங்கள் நாட்டின் பெருமைகளேடா !
இவர் விட்ட பணி நாம் தொடர்வோம்
என்றே இவர் முன் சபதம் எடுப்போமடா !
+
-:ஓவியன்:-

தாய்மண்.....


அம்மா!

உன்னை விட நான் தாய் நாட்டை நேசிக்கிறேன் -நீ

என்னை தான் பெற்றாய் !

என் தாய் மண் உன்னை

அல்லவா பெற்றேடுதுள்ளது

எனக்கு தாயைத் தந்த தாய்மண்ணை

நான் நேசிக்கிறேன் அம்மா !


-:ஓவியன்:-

04 March 2008

மாவீரரே.......


விடுதலை தீயில் சங்கமமானவர்களே !

உங்கள் வித்துடல் முன் மண்டியிடுகின்றோம்

சாவையே சரித்திரமாக்கி சாகாமல் எம்முள்

வாழ்பவரே !

எங்கள் விடிவுக்காய் நீங்கள் திரியாகினீர்

எங்கள் வாழ்வுக்காக உங்களை மெழுகக்கினீர்

எங்கே போய் தீர்க்க போகின்றோம்

உங்களுக்கு நாம் பட்ட கடன் !

வாழும் காலம் எல்லாம் விழி மூடி

உங்களை நினைத்திருப்போம் -எங்கள்

வாசல் வந்து போவீரா?



-:ஓவியன்:-

01 March 2008

தீ.....


தீயில் தோன்றி.........

தீயில் வழர்ந்து.........

தீயாய் எரிந்தோம்...

-:ஓவியன்:-