28 February 2008

மாவீரர்கள் ...!



சாவின் விளிம்பில் நின்று மார் தட்டியவர்

எம்மையார் வெல்வார் ....!

வீரச்சாவடைந்தும் எம் மனங்களில்

நீங்காது வாழ்பவர்கள்

மாவீரர்கள் ...!

இவர்கள் எம் மண்ணில் பூத்த சிவப்பு முத்துக்கள்

இம்மண்ணில் விதைக்கப்பட்ட பெரு விருட்ச்சத்தின்

வித்துக்கள்


-:ஓவியன்:-

தமிழா !


ஈழத்தமிழ் செந்திரு நாட்டில்

சிங்களத்தின் ஆதிக்கமோ ?

புலியை கலைக்க அடிக்கின்றோம்

என்று பொய்யர் சொல்வதை

நம்பாதே தமிழா !

திட்டமிடே எம்மையாழிக்க

வேண்டும்மேன்றே திணிக்கிறார்

சிங்கள இராணுவத்தை இங்கே

அவர்தம் கொட்டமதையடக்க

சிங்கள கூலிப்படைக்கு எதிராக

துப்பாக்கியை தூக்கு!

என் ஈழத்தமிழ் சகோதரா !

எத்தனை நாள் தூங்குவதாய் உத்தேசம்

எழுந்திரு!

-:ஓவியன்:-