17 March 2008

வீரத்தின் வித்துக்கள்



சத்தம் செய்யாதீர் -இங்கு


எங்கள் குழந்தைகள் துயில்கின்றனர்


தாயின் கருவறையில் இருந்து பிறந்த


இவர்கள் தாய் மண்ணின் கருவறையில்


துயில்கின்றனர்


சத்தம் செய்யாதீர்கள் -இங்கு


எங்கள் குழந்தைகள் துயில்கின்றனர்



சாவுக்கே சாகசம் காட்டிய வித்தகர்-இவர்கள்


சாவைகண்டும் அஞ்சதா வீரமறவர்கள்


தாய் நாட்டிற்காக தம்மையே தந்த


சத்திய புருசர்கள் இவர்கள்


சத்தம் செய்யாதீர்கள் -இங்கு


எங்கள் குழந்தைகள் துயில்கின்றனர்



கரிகாலனின் களச்சேனைகள்-இவர்கள்


அண்ணன் சொல்லையே வேதமாக


தமிழ்த் தாயகமே தம் லட்சியமாக கொண்ட


வரிப்புலிகள்-இவர்கள் சாவடைய வில்லை


இங்கு வாழ்கின்றார்கள் ..


இம்மண்ணில் துயில்கின்றார்கள்


எங்கள் குழந்தைகள்


சத்தம் செய்யாதீர்கள் !!

+

-:ஓவியன்:-

3 comments:

சோபி said...

@@@தாயின் கருவறையில்
இருந்து பிறந்த
இவர்கள் தாய் மண்ணின் கருவறையில் துயில்கின்றனர்@@@



அழகான வரிகள் தொடர்ந்து எழுதுங்கள்
உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் ...

அன்புடன் தோழி
நந்தா

oviyan said...

நன்றி நந்தா
உங்கள் வருகையை இட்டு மகிழ்ச்சி எனக்கு
ஓவியன்

தமிழ் said...

சொல்லுவதற்கு
வார்த்தைகளே இல்லை