19 April 2023

எழுவோம்!

 எழுவோம் எழுவோம் 

மரணித்த தேசத்தில் 

வித்தாகிப் போன    

விருட்சங்களே !


மீண்டெழுவோம் மீண்டெழுவோம்

விதைகளாய் வீழ்ந்து துளிர்த்தெழும்

மாவீரர்களே !


துச்சமாக எண்ணி நம்மை 

வேரறுத்த தீவினில் 

அச்சமின்றி  முளைத்தெழுவோம்

ஆல அமர அடி வேர்களாய் !



போர் கண்ட நாட்டில் 

போராடி மாய்ந்த

எம் மக்களை போற்றவே

பொங்கி எழுவோம்

ஆழிப் பேரலையாக !


வீர பூமியிலே விதைக்கப்பட்ட

எம் மக்கள் கனவு

 நனவாகும் ஒரு நாள் , 

அந் நாள் எம் நலனுக்காய் 

உயிர் தந்த வீரர்களை 

போற்றும் திரு நாள்


தலை முறைகள் பல கடந்தாலும்

தந்த வீரங்கள் மறக்குமா?

தாய் பாலை விட நாம் அதிகம் 

பருகியது மாவீரர்களின்

பராக்கிரமங்களையே !


விதைத்தது நெல்லாய் இருக்கையில் 

எப்படி முளைக்கும் இங்கே கள்ளி? 

சிந்திய குருதியின் சூடு தனியாத பூமியில் 

சீக்கிரமே  தனியும் எம்  சுதந்திர தாகம்


பல காலம் நொந்தே போனோம்

பலர் உடல் வெந்தே சாய்ந்தோம்

இருப்பினும் இனி ஒன்றாய்  நின்று 

சரித்திரம் பேச வென்றே வாழ்வோம் !



அலையாய் வந்து ,

விதையாய் வீழ்ந்து,

மீண்டும் எழுந்து,

மாவீரர் செயல் போற்றி

வெற்றியை பருகுவோம் !


-:சம்யுக்தா:-

23 April 2008

பலியாடுகள்...


சிந்திக்க மறந்தாயே !

சிங்கள நண்பா...

வீணாக உன் உயிர் போனதென்ன ?

எமக்கு தொல்லைகள் இட்ட நீ

இப்போது தொலைந்து தான் போனதென்ன

சிங்கம் என்று நீ இறுமாந்து

புலியிடம் மாட்டி புண்ணாகி போனதென்ன ...

பாரத நாட்டுக்கே பாடம் புகட்டியவர்களிடம்

நல்ல பாடம் கற்றுவிட்டீர்கள்

கொக்கெரிக்கும் மகிந்தவிடம் கூறிவிடு - அவன்

அனுப்பிய மிச்சங்களின் எச்சங்களை

பொறுக்கிச் செல்லும்படி ..

என்னென்றால் ...

இந்த மண்ணுக்கு நாங்கள்

தான் விதை

ஆக்கிரமிப்பவன் இரை
+

-:ஓவியன்:-

07 April 2008

உயிர்க்கொடையாளரே....


உருவம் இல்லாதவரே

உயிர்கொடையாளரே

காற்றுடன் கலந்தே எங்கள்

வாழ்வை தந்தவர் நீரே


சாவை துச்சமென மதித்தீரே

கொண்ட கொள்கையை

நெஞ்சினில் சுமந்தீரே

நாசம் பண்ணிய

நீசர்களையழிப்பதற்காய்

கந்தக புகையுடன் உம்மையும்

கலந்தீரே !

+

-:ஓவியன்:-

06 April 2008

தமிழன் படை


எரியும் நெருப்பென

எழுவோம் - நாம்

எதற்கும் அஞ்சோம்

சிரிக்கும் பகைவரின்

சிரம் கொய்தே

எம் பகை முடிப்போம்

+

-:ஓவியன்:-

17 March 2008

வீரத்தின் வித்துக்கள்



சத்தம் செய்யாதீர் -இங்கு


எங்கள் குழந்தைகள் துயில்கின்றனர்


தாயின் கருவறையில் இருந்து பிறந்த


இவர்கள் தாய் மண்ணின் கருவறையில்


துயில்கின்றனர்


சத்தம் செய்யாதீர்கள் -இங்கு


எங்கள் குழந்தைகள் துயில்கின்றனர்



சாவுக்கே சாகசம் காட்டிய வித்தகர்-இவர்கள்


சாவைகண்டும் அஞ்சதா வீரமறவர்கள்


தாய் நாட்டிற்காக தம்மையே தந்த


சத்திய புருசர்கள் இவர்கள்


சத்தம் செய்யாதீர்கள் -இங்கு


எங்கள் குழந்தைகள் துயில்கின்றனர்



கரிகாலனின் களச்சேனைகள்-இவர்கள்


அண்ணன் சொல்லையே வேதமாக


தமிழ்த் தாயகமே தம் லட்சியமாக கொண்ட


வரிப்புலிகள்-இவர்கள் சாவடைய வில்லை


இங்கு வாழ்கின்றார்கள் ..


இம்மண்ணில் துயில்கின்றார்கள்


எங்கள் குழந்தைகள்


சத்தம் செய்யாதீர்கள் !!

+

-:ஓவியன்:-

மாவீரச் செல்வங்களே ....


மாவீரச் செல்வங்களே !

சாகா வரம் பெற்ற சத்தியவான்களே

உங்கள் மக்களின் தாலாட்டிலும்

தாய்மண்ணின் இதமான அணைப்பிலும்

நிம்மதியாக துயிலுங்கள்

உங்கள் வழி நாம் தொடர்வோம்

உங்கள் கனவினை நினைவாக்கி

உம்மிடமே நாம் வருவோம்

+
-:ஓவியன்:-

08 March 2008

வேங்கையின் மைந்தர்கள்


வேங்கையின் மைந்தர்கள் நாமடா!
களவேட்டையாடிடும் வீரரேடா!
சிங்கம் எங்களின் பகையடா !-அதனை
சிறுத்தைகள் நாம் எதிர்போமடா !



தமிழ் அழிக்கும் பகைவனின்
கதை முடிக்கவே
தலைவனின் வழி நடப்போமடா !
செங்கடல் எங்கும் போர் முரசறைவித்தே
எம் தமிழீழத்தை காப்போமடா !



மண்ணுக்குள் வித்தானா மாவீரர்
எங்கள் நாட்டின் பெருமைகளேடா !
இவர் விட்ட பணி நாம் தொடர்வோம்
என்றே இவர் முன் சபதம் எடுப்போமடா !
+
-:ஓவியன்:-

தாய்மண்.....


அம்மா!

உன்னை விட நான் தாய் நாட்டை நேசிக்கிறேன் -நீ

என்னை தான் பெற்றாய் !

என் தாய் மண் உன்னை

அல்லவா பெற்றேடுதுள்ளது

எனக்கு தாயைத் தந்த தாய்மண்ணை

நான் நேசிக்கிறேன் அம்மா !


-:ஓவியன்:-

04 March 2008

மாவீரரே.......


விடுதலை தீயில் சங்கமமானவர்களே !

உங்கள் வித்துடல் முன் மண்டியிடுகின்றோம்

சாவையே சரித்திரமாக்கி சாகாமல் எம்முள்

வாழ்பவரே !

எங்கள் விடிவுக்காய் நீங்கள் திரியாகினீர்

எங்கள் வாழ்வுக்காக உங்களை மெழுகக்கினீர்

எங்கே போய் தீர்க்க போகின்றோம்

உங்களுக்கு நாம் பட்ட கடன் !

வாழும் காலம் எல்லாம் விழி மூடி

உங்களை நினைத்திருப்போம் -எங்கள்

வாசல் வந்து போவீரா?



-:ஓவியன்:-

01 March 2008

தீ.....


தீயில் தோன்றி.........

தீயில் வழர்ந்து.........

தீயாய் எரிந்தோம்...

-:ஓவியன்:-

28 February 2008

மாவீரர்கள் ...!



சாவின் விளிம்பில் நின்று மார் தட்டியவர்

எம்மையார் வெல்வார் ....!

வீரச்சாவடைந்தும் எம் மனங்களில்

நீங்காது வாழ்பவர்கள்

மாவீரர்கள் ...!

இவர்கள் எம் மண்ணில் பூத்த சிவப்பு முத்துக்கள்

இம்மண்ணில் விதைக்கப்பட்ட பெரு விருட்ச்சத்தின்

வித்துக்கள்


-:ஓவியன்:-

தமிழா !


ஈழத்தமிழ் செந்திரு நாட்டில்

சிங்களத்தின் ஆதிக்கமோ ?

புலியை கலைக்க அடிக்கின்றோம்

என்று பொய்யர் சொல்வதை

நம்பாதே தமிழா !

திட்டமிடே எம்மையாழிக்க

வேண்டும்மேன்றே திணிக்கிறார்

சிங்கள இராணுவத்தை இங்கே

அவர்தம் கொட்டமதையடக்க

சிங்கள கூலிப்படைக்கு எதிராக

துப்பாக்கியை தூக்கு!

என் ஈழத்தமிழ் சகோதரா !

எத்தனை நாள் தூங்குவதாய் உத்தேசம்

எழுந்திரு!

-:ஓவியன்:-